Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிகளை மாற்றி மாற்றி உறவு கொள்ளும் கடற்படை அதிகாரிகள்: விசாரணை நடத்த உத்தரவு

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (16:16 IST)
பதவி உயர்வுக்காக கடற்படை அதிகாரிகள் தங்கள் மனைவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளிக்கும் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


 
 
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை தளத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் 26 வயது மனைவி, பதவி உயர்வு பெறுவதற்காக தனது கணவர் தன்னை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளித்ததாக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், கடற்படை அதிகாரிகள் மற்றவர்களின் மனைவிகளுடன் உறவு கொள்ளும் செயல் கடற்படையில் வழக்கமான ஒன்றாக உள்ளது.
 
எனது கனவரின் அனுமதியோடு பல கடற்படை அதிகாரிகள் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வேறு ஒருவரின் மனைவியுடன் எனது கனவர் உறவு கொண்டதை நான் பார்த்தேன் என அந்த பெண் கூறியுள்ளார்.
 
மேலும், இது தொடர்பாக கடற்படை தளபதி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு விசாரணை குழுவை அமைக்க கேரள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்