Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சாத்தியமா?: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (13:21 IST)
ஓரினச் சேர்க்கை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 337-இல் உள்ள ஓரினச் சேர்க்கை தண்டனைக்குறியது என்பதை மாற்றி அமைப்பது தொடர்பான இந்த விசாரணை இன்று நடைபெற உள்ளது.


 
 
இந்தியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாக இருந்ததை கடந்த 2009-இல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்போது நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு மாற்றி அமைத்தது.
 
வயதுக்கு வந்த இருவர் தங்கள் விருப்பத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றமாகது என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
 
உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்த உத்தரவை மறு சீராய்வு செய்ய மத்திய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தீர்ப்பை திருத்தக்கோரி மத்திய அரசு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!