Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (13:41 IST)
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடராஜன் உள்ளிட்ட நால்வருக்கு  சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை எதிர்த்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் 17ஆம் தேதி உயர்நீதிமன்றம் நடராஜனுக்கு அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து நடராஜன் உடல்நலத்தை காரணம் காட்டி சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனுதாக்கல் செய்தார். அவரின் கோரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.
 
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நடராஜனுக்கு சிறை செல்வதிலிருந்து தற்காலிமாக விலக்கு அளித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் நகலை நடராஜன், சமர்பிக்காததால் கடந்த 7-ம் தேதி, சிபிஐ நடராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து நடராஜன் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடராஜன் தரப்பினரை 25 லட்சம் ரூபாய்க்கு பிணைத்தொகை செலுத்தி, கோர்ட்டில் சரணடைந்து பின்னர் ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments