Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு நாளா கேஸ் கொடுக்காதது ஏன்? பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (12:18 IST)
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இத்தனை காலமாக வழக்கு தொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலமாக இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து 500க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட நிலையில் அவற்றின் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் “2019லிருந்து ஒட்டு கேட்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்காதது ஏன்? தற்போது குறுகிய காலத்திற்குள் இந்த விவகாரத்தை விரைவுப்படுத்துவது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் பெரும்பாலான புகார்கள் மீடியாக்களில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே இருப்பதால் செய்தியின் உண்மை தன்மை அறிந்த பிறகு மேற்கொண்டு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள்: சபாநாயகருக்கு பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலின்..!

திமுக எம்பிக்களின் டீசர்ட் வாசகங்கள்.. சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments