Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்கள் பாலியல் விருப்பங்களை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்ற கருத்தை நீக்கிய உச்சநீதிமன்றம்

Siva
புதன், 21 ஆகஸ்ட் 2024 (11:06 IST)
இளம் பெண்கள் பாலியல் ஆசைகளை அடக்கி கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் அந்த கருத்தை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை இளைஞர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேற்கு வங்க கீழமை நீதிமன்றம் 20 ஆண்டுகள் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் உடலுறவு என்பது இருவரின் சம்மதத்துடன் தான் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் மட்டும் இது குற்றம் ஆகாது என்று குறிப்பிட்டு இளைஞரை விடுதலை செய்தது.

அதுமட்டுமின்றி இளம் பெண்கள் இரண்டு நிமிட பாலியல் இன்பத்திற்காக சமூகத்தின் பார்வையில் தோற்றவளாக கருதப்படுகிறார் எனவே இளம் பெண்கள் பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் தேவையில்லாத சில விஷயங்களை பதிவு செய்ததை கண்டிக்கிறோம் என்றும் ஒரு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை எழுதும்போது நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் தீர்ப்புகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை குறித்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தார்.

மேலும் விடுதலை செய்யப்பட்ட நபர் குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்