Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிண்டன்பர்க் அறிக்கைகளை எந்த நாடும் மதிப்பதே இல்லை.. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்

Siva
புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:40 IST)
ஹிண்டன்பர்க் அறிக்கைகளை உலகின் எந்த நாடும் மதிப்பதில்லை என்றும், ஆனால், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஹிண்டன்பர்க் அறிக்கையை தீவிரமாக எடுத்து கொண்டு விவாதிப்பது வெட்கக்கேடானது என்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் சார்ந்த நிறுவனங்களில்  செபி தலைவர் மாதபி புரி புச் பங்குகளை வைத்துள்ளார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இதுகுறித்து கூறிய போது, ‘ஹிண்டன்பர்க் அறிக்கைகளை உலகில் உள்ள எந்த நாடும்  மதிப்பதே இல்லை. இந்தியாவில் மட்டுமே இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. இந்தியாவை ஹிண்டன்பர்க்  துச்சமாக பார்க்கிறது, இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற நிறுவனங்களின் அறிக்கைகளை அனுமதித்தால்,   நம் நீதி அமைப்பையே கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments