Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு; சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமில்லை

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:05 IST)
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமில்லை சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் குறித்தான வழக்கில் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டலாம் எனவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் தனியாக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இதை தொடர்ந்து சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதா? அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதா? என்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு அளிக்க திட்டமில்லை என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

கடலுக்கு அடியில் அதிநவீன ஆயுத சோதனை.. இந்திய கடற்படை சாதனை..!

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

ரூ.1500 கோடி மோசடி புகார்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது.. அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments