Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் கமல்நாத்தின் உறவினர் திடீர் கைது : அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:14 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வருமான கமல்நாத்தின் உறவினரை, ரூ. 354 கோடி வங்கிக் கடன் மோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்த சம்பவம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல்பூரி. இவர் மற்றும் இவரது குடும்பத்திற்குச் சொந்தமான பிரபல ‘ மோசர் பேர்’ என்ற நிறுவனம் டிவிடி, சிடி, போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்துவருகின்றது. இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு பலவேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார் ரதுல்பூரி மற்றும் அவர் குடும்பத்தினர். ஆனால் இந்தக் கடன்களை முறையாகத் திரும்பச் செலுத்தவில்லை என தெரிகிறது.
 
முக்கியமாக செண்டிரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் 354 கோடி ரூபாயைக் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை.  இதையடுத்து பல முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தி பல வங்கிகளில் அவரும் அவரது குடும்பத்தினரும் கடன் பெற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட வங்கிகள் ரசூல்பூரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்தன. இப்புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.  பின்னர் சிபிஐ  அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் ரசூல்பூரியின் வீடு அலுவலகத்தில் சோதனை நடத்தி பல முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதில் ரசூல்பூரி முறைகேடுகள் செய்துள்ளது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ரசூல்பூரி வெளிநாடு தப்பிச் செல்வதாக அமலாக்கத்துறை சந்தேகித்தனர். இதனைத்தொடர்ந்து ரசூல்பூரியைக் கைதுசெய்து அவரது வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
 
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில், முதல்வரின் உறவினர் கைது  செய்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments