Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையை அடுத்து சமையல் கேஸ் விலைக்கு ஆப்பு

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (09:45 IST)
பெட்ரோல் ,டீசல் விலை கடந்த சில மாதங்களாக விஷம் போல் தினந்தோறும் ஏறிக்கொண்டிருப்பதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் திடீரென சமையல் கேஸ் விலையும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் ரூ.838.50-க்கு விற்கப்படும் சிலிண்டரின் விலை இந்த மாதம் முதல் மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலைரூ.888.50-க்கு விற்கப்படும். அதேபோல் மானியமுள்ள சிலிண்டரின் விலை தற்போது ரூ. 470-க்கு விற்கப்படும் நிலையில் இனி இந்த சிலிண்டர்களின் விலை ரூ. 472.89 ஆக உயரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன..

மேலும் இன்று முதல் சமையல் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகை ரூ. 320.49 முதல் ரூ. 376.60-ஆக உயர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு இதுநாள் வரை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 470 மானியத்தை அரசு செலுத்தி வந்த நிலையில் இனி ரூ.510 வங்கிக் கணக்கில் மானியமாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments