Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களவை உறுப்பினரானார் சுப்பிரமணியன் சுவாமி: இன்று பதவியேற்றுக்கொண்டார்

மாநிலங்களவை உறுப்பினரானார் சுப்பிரமணியன் சுவாமி: இன்று பதவியேற்றுக்கொண்டார்
, திங்கள், 25 ஏப்ரல் 2016 (11:55 IST)
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 பேர் இன்று மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர்.



 
 
மாநிலங்களவையில் மொத்தமுள்ள 247 இடங்களில் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் காலியாக இருந்த இடங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம், பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரபல பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா ஆகிய 6 பேரின் பெயரை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது.
 
மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதையடுத்து இவர்கள் 6 பேரும், மாநிலங்களவையில் இன்று மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil