Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியையும் விட்டுவைக்காத சுப்பிரமணியன் சாமி

மோடியையும் விட்டுவைக்காத சுப்பிரமணியன் சாமி
, புதன், 29 ஜூன் 2016 (09:00 IST)
சுப்பிரமணியன் சாமி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குறிய கருத்துகளை கூறி வந்த நிலையில் தற்போது மோடியையும் மறைமுகமாக தாக்கி அவரது டுவிட்டர் பக்கத்தில் தத்துவம் பேசியுள்ளார்.


 

 
பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.பி. சுப்பிரமணியன் சாமி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார். அதுவும் குறிப்பாக ரிசர்வ் வக்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது கடுமையான குற்றம்சாட்ட்டினார்.
 
பின்னர் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் நீதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் மீதும் கடும் கோபம் காட்டினார். இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கட்சியை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. சுய விளம்பரத்திற்காக சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒருவர் வெளியிட்டால் அது தவறு என்று கூறினார்.
 
இதன் மூலம் மோடி மறைமுகமாக சுப்பிரமணியன் சாமியை தாக்கி பேசினார். அது சுப்பிரமணியன் சாமியை கண்டிப்பது போலும் இருந்தது. இந்நிலையில் சுப்பிரமண்ணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், உலகம் ஒரு பொதுவான சமநிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, சுகம் - தூக்கம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும் என கிருஷ்ண பரமாத்மா அறிவுறுத்தியிருக்கிறார், என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
சுப்பிரமணியன் சாமியின் இந்த கருத்து உலக பொருளாதார கொள்கையுடன் இந்திய பொருளாதாரத்தை ஒப்பிட்டு கூறியது போல் உள்ளது. மேலும் மோடி இதை அறியாமல் தன்னை மறைமுறைமாக கண்டிப்பதில் எந்த பலனும் இல்லை என்பதை மறைமுகமாக டுவிட்டரில் தத்துவ கருத்து தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: இன்று பிற்பகல் தீர்ப்பு