Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பொறுக்கிகளே பயமா?: சுப்பிரமணியன் சுவாமியின் தொடர் சீண்டல்கள்!

தமிழக பொறுக்கிகளே பயமா?: சுப்பிரமணியன் சுவாமியின் தொடர் சீண்டல்கள்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (13:09 IST)
தமிழர்களை சீண்டிப்பார்ப்பதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர் கதையாக கொண்டுள்ளார். சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழர்களை எரிச்சலூட்டுவது, பின்னர் அது அவருடைய தனிப்பட்ட கருத்து என தமிழக பாஜக விளக்கம் கூறுவது வாடிக்கையாகிவிட்டது.


 
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் உணர்ச்சிப்பெருக்கெடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இளைஞர்கள் மாணவர்களின் போராட்டத்தால் இந்தியாவே மிரண்டு போய் இருக்கிறது.
 
முடிவு கிடைக்காததால் மக்களின் போராட்டம் வீரியமடைந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுபவர்களை சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள் என விமர்சித்தார் மேலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்ப்படுத்துவோம் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 
இந்நிலையில் மீண்டும் தமிழர்களை பொறுக்கிகள் டுவிட்டரில் என திட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பீட்டாவை மிரட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்யும் அனைத்து தமிழ் பொறுக்கிகளும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக தங்கள் முகவரியையும் எழுத வேண்டும் என ஒரு டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

 
மற்றொரு பதிவில், முகவரியை கேட்டதும் பொறுக்கிகள் ஏன் பதற்றம் அடைகிறீர்கள்? பயமா? ஸ்டாலினும் கருணாநிதியும் தங்கள் பாதுகாப்புக்கு ஏன் தமிழக போலீஸ் படைகளை வைத்துக்கொள்ளாமல் மத்திய பாதுகாப்புடன் உள்ளனர்? என்று கூறியுள்ளார்.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments