Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னக் கொடுமை சார் இது? மாணவர்கள் ‘பிட்’ அடிக்க உறவினர்கள் படும்பாட்டை பாருங்கள்

என்னக் கொடுமை சார் இது? மாணவர்கள் ‘பிட்’ அடிக்க உறவினர்கள் படும்பாட்டை பாருங்கள்
, வெள்ளி, 20 மார்ச் 2015 (11:11 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் உறவினர்கள் ஜன்னல் மீது ஏறியும், கம்பில் கட்டியும் ‘பிட்’ கொடுக்கும் காட்சியை பாருங்கள்!
 
இந்த கொடுமை நடந்தது பீகாரில் மாநில 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்தான். மாநிலம் முழுவதும் கடந்த 17ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்று இருக்கிறார்கள்.

 
இந்நிலையில், பீகார் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல மாடிகளை கொண்ட அந்த தேர்வு மையத்தை சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டிருந்தனர்.
 
மேலும் பல பேர் அந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டு உள்ளே பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.
 
webdunia

 
மேலே ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். மேலும் சிலர் கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். தேர்வு அறைகளில் இருந்த எல்லா மாணவர்களுமே கிட்டத்தட்ட ‘பிட்‘டோடுதான் பரீட்சையை எழுதினார்கள்.
 
நாம் அதிர்ச்சியாகும் இந்த விஷயத்தை கண்டு, அந்த ஊர் மக்கள் சாதரணமாக கடந்து சென்றனர். ஆனால் அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil