Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்... பரபரப்பு செய்திகள்

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (21:16 IST)
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து 50 க்கும்  மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள், அப்பள்ளியின்  ஏற்பட்ட தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. அதன் பின்னர் பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அரசும் கல்வி நிர்வாகிகளும் ஆணை பிறப்பித்தனர். இருப்பினும் சிலர் அலட்சியத்தையே கடைபிடித்துவருகின்றனர்.
 
அந்த வகையில், உ.,பில் உள்ள மீரட் மாவட்டத்தில் உள்ள தபாத்துவா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி இயங்கிவந்தது. இந்நிலையில் இன்று, அந்த பள்ளிக்கூடத்தில் மேற்கூரை தீடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய குழந்தைகள்  பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டுசென்றனர்.  தற்போது சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள்  6 பேர் நிலை கவலைகரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments