Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

Mahendran
சனி, 15 பிப்ரவரி 2025 (08:57 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தேர்வுக்கு நேரமாகிவிட்டதை அடுத்து, பாராகிளைட் உதவியுடன் கல்லூரிக்குச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர், பஞ்சகனி என்ற மலைப்பகுதிக்கு சென்று இருந்தார். அங்கிருந்து தனது கல்லூரிக்கு தேர்வு எழுத புறப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் புறப்பட முடியவில்லை. 
 
கல்லூரிக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்பதை அறிந்த அவர், என்ன செய்வது என்று யோசித்தார்.போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், வாகனத்தில் சென்றால் கண்டிப்பாக சரியான நேரத்தில் செல்ல முடியாது என்று நினைத்தார். 
 
உடனே, பாராகிளைட் சாகச விளையாட்டு குழுவினரை அணுகினார். அவர்கள், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன், மாணவரை பாராகிளைடில்   மலைப்பகுதியின் கீழ் பகுதியில் இறக்கிவிட்டனர். இதனை அடுத்து, அவர் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுத முடிந்தார். 
 
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments