Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவி பாலியல் பலாத்காரம்..! டியூசன் ஆசிரியர் கைது..!!

Senthil Velan
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:52 IST)
கேரளாவில் நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவியை 3 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 28). இவர் அந்த பகுதியில் 3 டியூசன் மையங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒரு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் கணித பாடத்திற்கு டியூசனுக்கு சேர்ந்தார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் டியூசன் சென்டர் உரிமையாளரான ஆசிரியர் சரத், நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கிறார். 
 
அதனை காண்பித்து மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் அந்த மாணவியின் சமூக வலைத்தள பக்கத்தை கையாணடு வந்துள்ளார். அந்த மாணவி தற்போது பி.டெக். படிக்கும் நிலையில், சரத்தின் டியூசன் சென்டரில் தொடர்ந்து படிக்கிறார். 
 
தன்னிடம் உள்ள நிர்வாண படங்களை காண்பித்து மிரட்டியபடி கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை ஆசிரியர் சரத் பாலியல் பலாத்காரம் செய்தபடி இருந்திருக்கிறார். டியூசன் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தகவலை, அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் தெரிவித்தார். தோழியின் அறிவுறுத்தலின் பேரில் டியூசன் ஆசிரியர் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி, ஆளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
 
அதன்பிறகே டியூசன் ஆசிரியரால் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டியூசன் ஆசிரியர் சரத்தை  கைது செய்தனர். மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா? என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


ALSO READ: துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஜெயக்குமார் காட்டம்.!!


இது போன்று வேறு மாணவிகளை ஆசிரியர் சரத் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்