மாணவி கூட்டு பலாத்காரம் ! எஞ்ஜினியரிங் மாணவர்கள் கைது

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (12:05 IST)
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காக்காடே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 11 ஆம் வகுப்பு மாணவியை நான்கு எஞ்ஜினியரிங் மாணவர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் மாணவர்கள் நான்கு பேரும் மாணவியை பாபுபூர்வா காவல் நிலையத்திற்கு அருகில் விட்டுச் சென்றுவிட்டனர்.
 
இதனையடுத்து மாணவி போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்ததை அழுதபடியே கூறியுள்ளார். அதன் பின் போலீஸார்  சம்பந்தப்பட்ட மாணவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சவ்வின் சுமார் கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். அதனால் துரிதமாக விசாரிக்கப்பட்டு அனுராக், ஷாக்கு, சுபம், அபிஷேக், ஆகிய நான்கு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கபட்டுள்ளது. மாணவிக்கு நன்கு அறிமுகமான மாணவர்கள் தான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments