Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சை பெறவந்த இளம் பெண்ணைக் கற்பழித்த மருத்துவர்

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2014 (16:15 IST)
வயிற்று வலிக்கு சிகிச்சை பெறவந்த இளம் பெண்ணுக்கு மயக்க மாத்திரையை கொடுத்து மருத்துவர் கற்பழித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பாரிகி நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவர் நரேந்திரன் என்பவரிடம் சிகிச்சக்காக அழைத்துச் சென்ற போது, ஓரிரவு இங்கு தங்கி சிகிச்சை பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறிய மருத்துவர், தனியாக சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண்ணுக்கு மயக்க மாத்திரையை கொடுத்துள்ளார். பின்னர் அந்தப் பெண் மயக்கமடைந்ததும் கற்பழித்துள்ளார்.

பின்னர் மயக்கம் தெளிந்த அந்த இளம் பெண் தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்து, மருத்துவடம் தகராறு செய்த போது, விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர், சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான மறுநாள், மீண்டும் வயிற்று வலி அதிகமாகவே, வேறொரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அந்த பெண் கர்ப்பமடைந்து இருப்பது தெரிய வந்தது.

மணமகன் வீட்டார், திருமணம் ஆன மறுநாளே கர்ப்பமா என்று கடுமையாகக் கோபம் அடைந்தனர். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோருக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்து வந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது, மருத்துவர் நரேந்திரனால் கற்பழிக்கப்பட்டதையும், அவர் மிரட்டலுக்கு பயந்து உண்மையை மறைத்து விட்ட தகவலையும் அந்த பெண் தெரிவித்தார்.

அவர்கள் அளித்த புகாரையடுத்து, மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாக உள்ள நரேந்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments