Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை: மீண்டும் ஓர் சுவாதி சம்பவம்!

மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை: மீண்டும் ஓர் சுவாதி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (08:49 IST)
டெல்லி அருகே குர்கானில் உள்ள எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 34 வயது பெண் ஒருவரை 26 வயது ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் காலை 9.30 மணிக்கு பட்டப்பகலில் நடந்துள்ளது.


 
 
படுகொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் பெயர் பிங்கி தேவி எனவும் அவர் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண் என்பது தெரியவந்துள்ளது. பியூட்டி பார்லர் ஒன்றில் பணி புரிந்து வந்த பிங்கி தேவிக்கு 26 வயதான ஜிஜேந்தர் என்ற ஆட்டோ டிரைவர் நீண்ட நாடகளாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்துக்கு சென்ற ஜிஜேந்தர் சிங் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிங்கி தேவியை சரமாரியாக குத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் பிங்கி தேவியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட பிங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளி ஜிஜேந்தர் சிங்கை பாதுகாப்பு வீரர்கள் பிடித்து குர்கான் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஜிஜேந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments