Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் திருமணத்தில் கலந்து கொள்ள ரூ.50 லட்சம் பெற்ற ஸ்ரீதேவி?

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (13:02 IST)
துபாயில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி சம்பளம் பெற்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 
 
அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 2 மணிக்கு மேல் நடக்க இருக்கிறது. தற்போது அவரின் உடலுக்கு தமிழ், பாலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது முடிந்தவுடன் அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், தொழில் முறை நடிகையான ஸ்ரீதேவி பண விவகாரத்தில் படு கறார் என செய்திகள் வெளிவந்துள்ளது. திருமணத்திற்கு பின் நடிப்பதைக் குறைத்துக்கொண்டாலும், தனியார் விழாக்களில் கலந்து கொள்வது, விளம்பர படங்களில் நடிப்பதன் மூலம் அவர் சம்பாதித்து வந்துள்ளார். 
 
துபாயில், அவர் இறுதியாக கலந்து கொண்ட திருமண விழாவில் கலந்து கொள்ள அவருக்கு ரூ.50 லட்சம் பேசி, ரூ.30 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாம். இத்தனைக்கும், அது கபூர் குடும்பம் தொடர்பான ஒரு திருமண விழாதான். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீதி பணத்தை கொடுப்பதாக கூறினார்களாம். இதனாலேயே அவர் அங்கு தனியாக தங்கியிருந்தார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்