Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் சிறப்புப் புலனாய்வுக் குழு.. பரபரப்பு தகவல்..!

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (10:54 IST)
கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரஜ்வால் கைது செய்யப்படுவது உறுதி என்றும், ஜெர்மனி செல்லும் சிறப்புப் புலனாய்வுக் குழு அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வரும் என்றும் கூறப்படுகிறது.
 
முன்னதாக ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்ததை அடுத்து  எஃப்.ஐ.ஆரில் கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பாலியல் வீடியோ விவகாரம் வெளியானவுடன்  பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றுவிட்டார்.  இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்