Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களில் கனமழை : இன்று என்னென்ன ரயில்கள் ரத்து?

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (08:12 IST)
தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரயில்கள் ரத்து குறித்த விவரங்களை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன் விவரம் இதோ:
 
கனமழை காரணமாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 7.25, 10.10, மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரெயில், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 7.35 மணிக்கு புறப்படும் ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.
 
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 7.20, 8.15, மாலை 4.25, 6.15 மணிக்கு புறப்படும் ரெயில், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 11.05 மணிக்கு புறப்படும் ரெயில், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. 
 
மேலும்ன் தூத்துக்குடியில் இருந்து இன்று சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும்.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments