Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியை ராஜினாமா செய்தாரா சோனியா காந்தி? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (17:10 IST)
காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்து விட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கும் நிலையில் திடீரென சற்று முன்னர் காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியா காந்தி ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்கந்தி ராஜினாமா செய்தபின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தியின் ராஜினாமா ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் புதிய காங்கிரஸ் தலைவர் நாளையே தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய காங்கிரஸ் தலைவர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ப சிதம்பரம் அவர்களின் பெயர் இருப்பதாகவும் நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments