Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7500 ரூபாய்! காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முடிவு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (14:20 IST)
காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் தலா 7500 ரூபாய் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ’மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. கொரோனாவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் ஊரடங்கின் வெற்றி உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் ’இந்தியா முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் வேளையில் பாஜக வெறுப்பு மற்றும் வகுப்புவாத அரசியலை செய்து வருகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.  நெருக்கடியை சமாளிக்க ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7, 500 ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் பாஜகவுடன் நெருக்கமா.? மோடிக்கு எடப்பாடி வாழ்த்து..! எதற்காக தெரியுமா.?

மோடி பதவியேற்கும் நேரம் மாற்றம்..! ஜனாதிபதி மாளிகை முக்கிய அறிவிப்பு..!!

பாஜகவில் அண்ணாமலை யாரையும் வளரவிடமாட்டார்: கல்யாண் ராமன் குற்றச்சாட்டு!

ஆட்சிக்கு வந்ததுமே முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு! – தெலுங்கு தேசம் அறிவிப்பால் பாஜக அதிர்ச்சி!

தமிழ்நாட்டு மக்களைக் கவர பாஜக மேற்கொண்ட 5 முக்கிய முயற்சிகள்

அடுத்த கட்டுரையில்
Show comments