Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்த மகன்... அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 2 மே 2024 (10:15 IST)
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்த மகன் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய் என்பவர், தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். 
 
தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்த நிலையில் அடிக்கடி லட்சுமிபாயுக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
 
இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லட்சுமி பாயிற்கு கரண்ட் ஷாக் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அப்போதும் லட்சுமிபாய் மறுத்ததால், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார்.  
 
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தத்து நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments