Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் இனி வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள். அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (23:22 IST)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் மினிமம் பேலன்ஸ் குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சர்ச்சைக்குரிய நிபந்தனைகள் விதித்தது.





இந்நிலையில் இந்த வங்கி, தனது ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இந்த திட்டத்தின்படி அந்நிறுவனத்தின் நேரடி மக்கள் தொடர்பு அல்லாத ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தின் குறிப்பிட்ட நாட்களில் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்திற்காக முழுவதும் பாதுகாப்பு வசதி கொண்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்த இருப்பதாகவும், இதுகுறித்து முதல் சில மாதங்கள் வங்கி, ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க உள்ளதாகவும், வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மார்கெட்டிங், வணிகப் பிரிவு, சமூக வலைதள மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் மேம்படுத்த இருப்பதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்