Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் பால விபத்து சதிவேலையா? விபத்தில் இருந்து தப்பியவர் அதிர்ச்சி பேட்டி!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (11:05 IST)
குஜராத்தில் நேற்று நிகழ்ந்த பால விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இந்த விபத்து ஒரு சதி வேலை என இந்த விபத்திலிருந்து தப்பிய ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
குஜராத்திலுள்ள மோர்பி பாலத்தை வேண்டும் என்று சிலர் ஆட்டத்தொடங்கினார் என்றும், ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்றும் விபத்திலிருந்து தப்பிய கோஸ்வாமி என்பவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார் 
 
சிலர் வேண்டுமென்றே பாலத்தை ஆட்ட தொடங்கியவுடன் இதற்கு மேல் செல்வது பாதுகாப்பானது இல்லை என்று கருதி என்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு திரும்பி வந்து விட்டேன் என்றும் ஊழியரிடம் இதுகுறித்து கூறிய போது அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் டிக்கெட் விற்பதில் மட்டுமே குறியாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்
 
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் அந்த பாலம் அருகே இல்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments