Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்னாப்டீல் பெண் ஊழியர் ஆட்டோவில் கடத்தல்: காவல் துறை தீவிர தேடுதல் வேட்டை

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (17:34 IST)
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 23 வயது பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்டுள்ளார்.


 
 
கடத்தப்பட்ட டிப்டி சர்னா ஸ்னாப்டீல் நிறுவனத்தில் லீகல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாக குர்கானில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து வைஷாலி வரை மெட்ரோவில் வருவார். அங்கிருந்து காசியாபாத் பேருந்து நிறுத்தத்திற்கு ஆட்டோவில் வருவார்.
 
சம்பவம் நடந்த அன்று இரவு ஆட்டோவில் வரும் போது அவர் தனது பெற்றோரிடம் போவில் பேசியபடி வந்துள்ளார். அப்பொழுது ஆட்டோ வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு பதையில் சென்றுள்ளது. அப்பொழுது டிப்டி சர்னா ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதையெல்லாம் போனில் பெற்றோர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
 
பின்னர் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. உடனடியாக டிப்டி சர்னாவின் பெற்றோர் சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் கடத்தப்பட்ட டிப்டி சர்னாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
டிப்டி சர்னா கடத்தப்பட்டது தங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என ஸ்னாப்டீல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் நல்லபடியாக திரும்பி வர நாங்கள் பிராத்தனை செய்வதோடு, காவல் துறைக்கு முடிந்த அளவுக்கு உதவுவோம் என ஸ்னாப்டீல் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

Show comments