ரூ.2 கோடிக்கு பாம்பு விஷத்தை விற்க முயன்ற நபர்கள் கைது

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (15:03 IST)
மகாராஷ்டிராவில் பாம்பு விஷத்தை விற்க முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வாபி நகரில் இருவர் பாம்பு விஷத்தை கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பாம்பின் விஷத்தை கடத்தி விற்க முயன்ற இருவரை அதிரடியாக கைது செய்தனர்.
 
அவர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. பாம்பின் விஷத்தை வைத்து பல மருந்துகள் தயாரிக்கலாம் என்பதால், மருந்து நிறுவனங்கள் இதற்கு நல்ல விலை கொடுக்கின்றன. ஆகவே பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த கடத்தலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 850 மில்லி பாம்பு விஷம் சர்வதேச மதிப்பு ரூ.1.70 கோடியாகும்.
 
இதனைத்தொடர்ந்து இதில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments