Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் குஜராத் முதல்வரா?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (05:01 IST)
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்மிரிதி இரானி. இவர் அந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து மத்திய அமைச்சராகவும் ஆக்கியுள்ளார் பிரதமர் மோடி

இந்த நிலையில் சமீபத்தில் வெற்றி பெற்ற குஜராத் மாநிலத்திற்கு முதல்வரை தேர்வு ஆலோசனையில் பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும், முதல்வர்கள் பட்டியலில் ஸ்மிரிதி இரானி பெயரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை ஸ்மிரிதி இரானி மறுத்துள்ளார்

குஜராத்தில் காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக இருப்பதால் வலுவான முதல்வர் தேவை என்ற ஆலோசனை நடந்து வருகிறது. ஸ்மிரிதி இரானியை தவிர மத்திய சாலை போக்குவரத்து துறை இணையமைச்சர், மன்சுக் மாண்டவியா, கர்நாடக கவர்னர், வஜுபாய் வாலா, மத்திய வேளாண் துறை இணையமைச்சர், புருஷோத்தம் ரூபாலா ஆகியோரின் பெயர்களும், முதல்வர் வேட்பாளர் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments