Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பாரத விழா’ ஆகிறது சுதந்திர தினம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (21:53 IST)
நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை ‘‘பாரத விழா’’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

 
இதையொட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. தொடக்க விழா, 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியா கேட் பகுதியில் நடைபெறுகிறது.
 
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாதையில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும் என்றும், அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மக்களின் பழக்க - வழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரங்குகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், பாரத விழா கலை நிகழ்ச்சிகளில் எல்லா மாநில இசை கலைஞர்களும் பங்கேற்பார்கள் என்பதுடன், ராணுவ வீரர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments