Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்போதைய முதல்வர் உட்பட 6 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு! எந்த மாநிலத்தில்?

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (15:27 IST)
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய முதல்வர் உள்பட ஆறு பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது '

அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இங்கு உள்ள 60 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் 34 தொகுதிகளில், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தி உள்ளன

இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 6 சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் உட்பட ஆறு பாஜக வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

வேட்பாளர்களை திரும்ப பெற வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்  பா.ஜ.க 41 இடங்களிலும், ஜே.டி.யு 7 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments