Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தி ஒழித்தார்: மோடி மறைக்கிறார்! – சிவசேனா நாளிதழ் விமர்சனம்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (08:48 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் செய்யப்படும் ஏற்பாடுகளை சிவசேனா நாளிதழ் விமர்சித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர இருக்கிறார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு குஜராத் சென்று காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட இருக்கிறார். இதற்காக குஜராத்தில் பல்வேறு மேம்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

ட்ரம்ப் பயணிக்க இருக்கும் வழிப்பாதையில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. ஆமதாபாத்தில் உள்ள பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த செயல்பாட்டை சிவசேனா நாளிதழ் விமர்சித்துள்ளது. இந்திரா காந்தி ‘வறுமையை ஒழிப்போம்’ என கூறினார். ஆனால் பிரதமர் மோடி சுவர் எழுப்பி வறுமையை மறைக்க பார்க்கிறார். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இங்கிலாந்து அரசர் அல்லது ராணி வந்தால் செய்யும் முன்னேற்பாட்டை போல இருக்கிறது ட்ரம்ப் வருகைக்காக அரசு செய்யும் ஏற்பாடுகள் என விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments