Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு டாட்டா, ராகுல்காந்திக்கு ஓகே: சிவசேனாவின் அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (10:20 IST)
பாஜகவின் நெருங்கிய கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியே மோடிக்கு எதிராக திரும்பியுள்ளதால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.



 
 
மோடி அலை மங்கிவிட்டதாகவும், ராகுல்காந்தி நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரம் வந்துவிட்டதாகவும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சியையும், காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சஞ்சய்ராவத், 'மோடியின் தவறான முடிவுகளால் நாட்டு மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், மோடி அலை மங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும் நாட்டின் சக்திவாய்ந்த அரசியல் பலம் மக்கள்தான் என்றும், மக்கள் ராகுல்காந்தியை தலைமை பொறுப்பிற்கு தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களாகவே பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் இடையிலான நட்பில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments