Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா ஏக்நாத் அணி எம்.எல்.ஏ கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மகாராஷ்டிராவில் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (11:54 IST)
சிவசேனா ஏக்நாத் அணி எம்.எல்.ஏ கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மகாராஷ்டிராவில் பரபரப்பு
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் கட்சியின் எம்எல்ஏ ஒருவரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி பிரிந்து பாஜக ஆதரவுடன் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்த அணியின் எம்எல்ஏ உதய்சந்த் என்பவரின் கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த காரை நோக்கி மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்து உள்ளது
 
இது குறித்து காவல்துறையில் புகார் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் கூறும்போது எம்எல்ஏ உதய்சந்த் வருவார் என்று எதிர்பார்த்து மறைந்திருந்து மர்ம நபர்கள் காத்திருந்ததாகவும் பின் தொடர்ந்து கற்களால் தாக்கியதாகவும் கூறுகின்றனர்
 
இதுபோன்ற சம்பவங்களால் தன்னை அச்சுறுத்த முடியாது என்று கூறியுள்ள உதய்சந்த் எம்.எல்.ஏ, மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments