Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்னல் குறைபாடு: 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதா?

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:39 IST)
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து சிக்னல் குறைபாடு காரணமாக ஏற்பட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் சிக்னல் குறைபாடு குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் பெரிய குறைகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதாகவும் இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயல்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே இது குறித்து கடிதம் எழுதி எச்சரித்து இருந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த எச்சரிக்கை தெரிந்தவுடன் உடனடியாக இந்த சிக்னலை சரி செய்ய இந்திய ரயில்வே முயற்சி செய்திருந்தால் இந்த விபத்தை நடந்து இருக்காது என்றும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் சிக்னல் குறைபாடு என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது முதலில் கிரீன் சிக்னல் தோன்றி அதன் பிறகு ரயில் கடந்த கொண்டு இருந்தபோதே ரெட் சிக்னல் மாறியதாகவும், இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments