Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து ராகுலை சந்திக்கும் சித்தராமையா , டிகே சிவகுமார்.. தூண்டில் போட ரெடியாக இருக்கும் பாஜக..!

Webdunia
புதன், 17 மே 2023 (10:32 IST)
இன்று 30 நிமிட வித்தியாசத்தில் அடுத்தடுத்து  சித்தராமையா    மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்துள்ள நிலையில் ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாத நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா  முதல்வர் பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமாரும் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதால் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு  சித்தராமையா    ராகுல் காந்தியை சந்திக்க இருக்கும் நிலையில் 12.00 மணிக்கு டிகே சிவகுமார் ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார். இருவரும் அரை மணி நேர வித்தியாசத்தில் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒரு வேளை சித்தராமைய்யா  முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் டிகே சிவக்குமாரை வளைக்க பாஜக தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments