துப்பாக்கி முனையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ; அதிர்ச்சி சம்பவம்!

Siva
வியாழன், 20 ஜூன் 2024 (15:16 IST)
தெலுங்கானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண் காவலரை எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் என்ற காவல் நிலையத்தில் பவானிசென்  காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
 துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்ததாகவும் தெரிகிறது.
 
இதனை அடுத்து பவானிசென் குற்றம் உறுதியானதால் அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அவர் மூன்று பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் இருந்த நிலையில் தற்போது அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்