திருமண நாளில் அம்மா, அப்பாவை கொலை செய்த ஒரே மகன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (17:06 IST)
டெல்லியில் அம்மா, அப்பாவின் திருமண நாளில் அவர்களை அவர்களுடைய ஒரே மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி கோமல் சமீபத்தில் தங்கள் திருமண நாளை கொண்டாட இருந்தனர். இவர்களுக்கு அர்ஜூன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில், திருமண நாள் கொண்டாடும் தினத்தில் அதிகாலை தனது தாய், தந்தை, சகோதரி ஆகியோர் கொலை செய்யப்பட்டதாக அர்ஜூன் காவல்துறையில் புகார் அளித்தார். தான் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு திரும்பிய போது மூவரும் இறந்து கிடந்ததாக அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்த போது, வீட்டுக்குள் யாரும் நுழைந்ததாக தெரியவில்லை. இதனை அடுத்து அர்ஜூனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்ததை அடுத்து, ஒரு கட்டத்தில் மூவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தனது தந்தை எப்போதும் தன்னிடம் கண்டிப்பாக இருப்பதாகவும், அதை தனது தாய் மற்றும் தங்கை வேடிக்கை பார்ப்பதாகவும் இதனால் ஆத்திரமடைந்து குடும்பம் முழுவதையும் கொலை செய்துவிட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்