Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

Siva
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (08:16 IST)
கேரளாவில் அரசு வேலைக்கான தேர்வு எழுத வந்த இளம் பெண்ணின் ஹால் டிக்கெட் பருந்து ஒன்று கவ்விக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற பகுதியில் நேற்று அரசு ஊழியர் தேர்வு நடைபெற்ற நிலையில், காலை 7 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து திடீரென பறந்து வந்த பருந்து ஹால் டிக்கெட்டை கவ்வி சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உதவிக்கு மற்றவர்களை அழைத்தார். ஹால் டிக்கெட்டை எடுத்த அந்த பருந்து மாடியில் உள்ள ஜன்னலில் உட்கார்ந்திருந்தது. ஹால் டிக்கெட் தொலைத்த பெண் உள்பட, சக தேர்வர்கள் அந்த பருந்தை நோக்கி கத்திய நிலையில், அது அசையாமல் இருந்தது.

"ஹால் டிக்கெட் இல்லையெனில் தேர்வு எழுத முடியாது" என்ற நிலை காரணமாக அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

சில நிமிடங்கள் கழித்து, பருந்து அந்த ஹால் டிக்கெட்டை கீழே போட்டு விட்டு பறந்து சென்றது. அதன் பின்னர் தான் அந்த பெண்ணுக்கு நிம்மதி ஏற்பட்டது.

அதன்பின், அந்த பெண் ஹால் டிக்கெட்டை எடுத்து உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு சென்றதால், அவரால் தேர்வு எழுத முடிந்தது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

வந்துவிட்டது Gemini Live.. வேற லெவலில் யோசித்த Google.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் AI chatbot..!

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments