Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.! இனி எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்..!!

Senthil Velan
வெள்ளி, 19 ஜூலை 2024 (17:59 IST)
புதுச்சேரியில் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் இனி சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதுச்சேரியில்  கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.  இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தினாலும், மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுவை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த காரணத்தினாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஜூலை மாதம் வரை சுமார் 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அந்த 12 நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பாடத்திட்டங்கள் முடிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அதை ஈடு செய்ய, எதிர்வரும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ரயில்வே துறையை சீரழித்த பாஜக.! சென்னை மெட்ரோ விரிவாக்கத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை..!!
 
இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள புதுவையின் பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி, பள்ளிக்கூடம் நடைபெற உள்ள அந்த 12 சனிக்கிழமைகளில், என்னென்ன கிழமைகளுக்கான பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments