Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கை வாக்கெடுப்பு - சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:43 IST)
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் திடீரென ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். 
 
நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் அசாம் உள்பட ஒருசில மாநிலங்களில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நாளை மகாராஷ்டிரா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 16 எம்.எல்.ஏ. தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆளுநர் ஆணை சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments