Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டிறைச்சி விருந்து: எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்தை தாக்கிய பாஜக எம்எல்ஏக்கள் (வீடியோ)

மாட்டிறைச்சி விருந்து: எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்தை தாக்கிய பாஜக எம்எல்ஏக்கள் (வீடியோ)
, வியாழன், 8 அக்டோபர் 2015 (12:27 IST)
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்தை பாஜகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தாக்கினர்.
 
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏவாக இருப்பவர் ஷேக் அப்துல் ரஷீத். இவர் எம்எல்ஏ விடுதியில், நேற்று மாட்டிறைச்சி விருந்து நடத்தினார்.
 
இந்நிலையில், மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் அவர் மீது பாஜகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
 
சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ தாக்கப்பட்டபோது, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
சட்டப் பேரவையில் எம்எல்ஏ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil