Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாவூத் இப்ராகிம் சரணடைவதை சரத்பவார் அரசு நிராகரித்தது: ராம் ஜெத்மலானி

தாவூத் இப்ராகிம் சரணடைவதை சரத்பவார் அரசு நிராகரித்தது: ராம் ஜெத்மலானி
, சனி, 4 ஜூலை 2015 (11:55 IST)
தாவூத் இப்ராகிம் சரணடைவதை சரத்பவார் அரசு நிராகரித்தது என்று பரபரப்பு தகவலை மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
 
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளி சோட்டா ஷகில் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து இருப்பதாகவும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தாவூத் இப்ராகிம் இருப்பதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.
 
இந்நிலையில், தாவூத் இப்ராகிம் பற்றி மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறும்போது, ''தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோர் இந்திய அதிகாரிகளிடம் சரண் அடைந்து தங்கள் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திக்க முன்வந்தனர். ஆனால், அப்போது முதல்வர் சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ் அரசு இதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டது.
 
webdunia

 
சோட்டா ஷகீல் லண்டனில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னை போலீசார் துன்புறுத்த மாட்டார்கள் என உறுதி அளித்தால் சரண் அடைய தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த தகவலை மகாராஷ்டிரா அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவித்தேன். ஆனால், மகாராஷ்டிர அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால், சோட்டா ஷகீலின் நிபந்தனைக்கு என்னால் உறுதி அளிக்க முடியவில்லை" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil