Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிப்பு குற்றச்சாட்டு - ஷாருக் கானின் கார் ஓட்டுனர் கைது

Webdunia
வியாழன், 26 ஜூன் 2014 (18:26 IST)
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானின் கார் ஓட்டுனர் கற்பழிப்பு குற்றச்சாட்டில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ராஜேந்திர குமார் என்னும் 34 வயது நபர் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானின் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு மற்றொரு நடிகையின் வீட்டில் வேலைசெய்யும் 17 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
 
அப்பெண்ணிடம் நட்பாய் பேசிவந்த ராஜேந்திர குமார், அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக அப்பெண்ணை ஏமாற்றி, ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் ராஜேந்திர குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!