குத்துச் சண்டை வீரரைப் போல் பெண்ணை புரட்டி எடுத்த வியாபாரி - ஆத்தாடி என்னா அடிங்குற

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (11:18 IST)
மத்திய பிரதேசத்தில் தொழில் போட்டியின் காரணமாக பூ  வியாபாரிகளுக்குள் குத்துச் சண்டை வீரர்களைக் போல மோதல் ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவில் அருகே உள்ள இரு பூக்கடை வியாபாரிகளுக்கிடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் இரு தரப்பினரிடையேயும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் வழக்கம் போல் நேற்றும் சண்டை நடைபெற்றது. ஒரு கட்டத்தில் வாய்த் தகராறு கைக்கலப்பாக மாறியது. ஆண் பெண் பேதமின்றி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
 
அதில் ஒரு நபர் பெண்கள் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்குகிறார். குத்துச்சண்டை வீரர்களைப் போல பெண்களை அடித்தார். இதனை தடுக்காமல் சுற்றி நின்ற மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments