Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையிலிருந்து பெங்களூருக்கும் ஐதராபாத்துக்கும் செமி அதிவேக ரயில்கள்

சென்னையிலிருந்து பெங்களூருக்கும் ஐதராபாத்துக்கும் செமி அதிவேக ரயில்கள்
, வெள்ளி, 25 ஜூலை 2014 (18:07 IST)
இந்திய ரயில்வே செமி அதிவேக ரயில்களை இயக்க 9 முக்கிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. மணிக்கு 160 முதல் 200 கிலோ மீட்டர் வரை வேகத்தில் செல்லக்கூடிய செமி அதிவேக பயணிகள் ரயில் இப்பகுதிகளில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோசின்ஹா ஜூலை 25 அன்று மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.


 
 
1. தில்லி - ஆக்ரா; 
 
2. தில்லி - சண்டிகர்; 
 
3. தில்லி - கான்பூர்; 
 
4. நாக்பூர் - பிளாஸ்பூர்; 
 
5. மைசூர் - பெங்களூர் - சென்னை; 
 
6. மும்பை - கோவா; 
 
7.மும்பை - அகமதாபாத்; 
 
8. சென்னை - ஐதராபாத்; 
 
9. நாக்பூர் -செகேந்திராபாத் 
 
ஆகிய முக்கிய பகுதிகளில் இந்த செமி அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.
 
ஏற்கனவே புதுதில்லி - ஆக்ரா, புதுதில்லி வரை அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்கள் சோதனை முறையில் இம்மாதம் 3ஆம் தேதி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் இதற்கேற்ப வகையில் இருப்புப் பாதைகள் உள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.
 
இந்தச் சோதனை ஓட்டத்தில் இந்த ரயில்கள் தில்லி, ஆக்ரா செல்ல 102 நிமிடங்களும் ஆக்ராவில் இருந்து புதுதில்லிக்கு 105 நிமிடங்களும் எடுத்துக் கொண்டன என்று அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil