Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (15:51 IST)
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அதிமுக, திமுக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் மீனவர் பாதுகாப்பு குறித்து மனு தரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.க்கள் கொடுக்கும் மனுவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவிறுத்தியுள்ளது.
 
அதிமுக எம்.பி. தம்பிதுரை, திமுக முன்னாள் எம்.பி. விஜயன் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான வழக்கில் அட்டார்னி ஜெனரல் விளக்கமளித்துள்ளார். கச்சத்தீவை திரும்ப பெறுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைப்பதாகவும், இலங்கை மீது போர் புரிந்தா கச்சத்தீவை மீட்க முடியும் என்று அட்டார்னி ஜெனரல் ரோத்கி கேள்வி எழுப்பினார். இருநாட்டுப் பிரச்சனை என்பதால் நீதிமன்றத் தலையிட முடியாது எனறும் அவர் வாதிட்டார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments