Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படம் அகற்றப்படுமா? சட்டப்பேரவைத் தலைவர் தகவல்

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (11:43 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது நிலையில் சட்டப்பேரவையில் உள்ள சாவர்க்கர் படம் அகற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சாவர்க்கர் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்றும் எண்ணம் இல்லை என்றும் சட்டப்பேரவை தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்துத்துவா சிந்தனையாளர் சாவர்க்கரின் படம் கடந்த பாஜக ஆட்சியின் போது  சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் உள்ள சாவர்க்கர் படம் அகற்றப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த  முதல்வர் சித்தராமையா ’இதுகுறித்து சட்டப்பேரவை தலைவர் முடிவெடுப்பார் என்றும் அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் கூறினார். அதன் பிறகு பேரவை தலைவர் இது குறித்து கூறிய போது சாவர்க்கரின் படத்தை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments