Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து அமைச்சர் வீட்டுக்கு அடிக்கடி சென்ற சசிகலா

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:56 IST)
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஓசூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக டிஐஜி குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் தண்டை பெற்று வரும் சசிகலா பெங்களூர் சிறையில் சகல வசதிகளுடன் வாழ்வதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இதையடுத்து அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடிக்க ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரனை குழு அமைக்கப்பட்டது.
 
டிஐஜி ரூபா விசாரணை குழுவிடம் சசிகலா விவகாரம் தொடர்பாக 74 ஆதரங்களை தாக்கல் செய்தார். அதில் சசிகலா சிறையை விட்டு வெளியே சென்று வரும் வீடியோ வெளியானது. அந்த வீடியோ காட்சி அவர் சிறைக்கு வெளியே சென்று வருவதை உறுதி செய்தது.
 
ஆனால் சசிகலா ஆதரவாளர்கள், சசிகலா பார்வையாளர்களை சந்திக்க சென்ற காட்சி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாக ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.
 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவருக்கு சொந்தமான வீடு ஒன்று பெங்களூர் சிறை அருகே உள்ளது. அங்குதான் சசிகலா அடிக்கடி சென்று வருவதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments